இரு வாரத்திற்குள் பாம்பனில் புதிய ரயில் பாலம் திறப்பு விழா தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் தகவல்
இரு வாரத்திற்குள் பாம்பனில் புதிய ரயில் பாலம் திறப்பு விழா தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் தகவல்
இரு வாரத்திற்குள் பாம்பனில் புதிய ரயில் பாலம் திறப்பு விழா தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் தகவல்
ADDED : மார் 23, 2025 06:38 AM

ராமேஸ்வரம்,: இரு வாரத்திற்குள் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நடக்கும். விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.
பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நின்றபடி புதிய ரயில் பாலத்தை நேற்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் பார்வையிட்டார்.
இதன் பின் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சி இடம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடக்கும்ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணியை பார்வையிட்டு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக கவுசல் கிஷோர் கூறியதாவது:
இரு வாரத்திற்குள் பாம்பன் பாலம் திறப்பு விழா நடக்கும். விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளது. பாம்பன் பழைய பாலத்தை பராமரிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என்றார்.