/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ தொழிலாளியை அடித்து கொன்ற 5 பேர் கைது தொழிலாளியை அடித்து கொன்ற 5 பேர் கைது
தொழிலாளியை அடித்து கொன்ற 5 பேர் கைது
தொழிலாளியை அடித்து கொன்ற 5 பேர் கைது
தொழிலாளியை அடித்து கொன்ற 5 பேர் கைது
ADDED : மார் 23, 2025 06:26 AM
திருச்சி : திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே, பெரிய பள்ளிபாளையம் வயல் வெளியில், கடந்த 15ம் தேதி ஆண் ஒருவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக, வி.ஏ.ஓ., துரைக்கண்ணன் காட்டுப்புத்துார் போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில், தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டியை சேர்ந்த வாழை இலை அறுக்கும் தொழிலாளியான சுரேஷ், 45, என தெரிய வந்தது.
தொட்டியத்தை சேர்ந்த சிவஞானம், 35, என்பவரை பிடித்து விசாரித்ததில், பெரிய பள்ளிபாளையத்தை சேர்ந்த அறிவழகன் என்பவரின் பைக்கை சுரேஷ் திருடியதாக கூறி, சிவஞானம், அறிவழகன், 48, செல்வராஜ், 58 மற்றும் ராஜேந்திரன், 55, குணசேகரன், 38, ஆகியோர் தென்னை மட்டையால் சரமாரியாக அடித்துள்ளனர்.
இதில், காயமடைந்த சுரேஷ் இறந்ததால், சம்பவ இடத்திலேயே போட்டு விட்டு ஐந்து பேரும் தலைமறைவாகி உள்ளனர் என தெரிய வந்தது.
தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான தனிப்படை போலீசார், ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சுரேஷுக்கு புனிதா என்ற மனைவி, இரு மகள், ஒரு மகன் உள்ளனர்.