ADDED : செப் 15, 2025 02:58 AM
மேலாண் மை கல்வி வழங்கும் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்' எனும் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர, பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நுழைவுத் தேர்வு, நவ., 30ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, வரும் 20ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில், காலியாக உள்ள 127 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, அக்., 3 வரை ww w.iob.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.