பள்ளிகளுக்கு உணவு பொருள் சமூக நலத்துறை விளக்கம்
பள்ளிகளுக்கு உணவு பொருள் சமூக நலத்துறை விளக்கம்
பள்ளிகளுக்கு உணவு பொருள் சமூக நலத்துறை விளக்கம்
ADDED : ஜூலை 03, 2025 12:51 AM
சென்னை:'காலை உணவு, மதிய உணவு ஆகிய இரண்டு திட்டங்களுக்கும், உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது' என, சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்த நிலையில், மதிய உணவு திட்டத்திற்கு வழங்க வேண்டிய, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட, சில மாவட்டங்களில் வழங்கப்படவில்லை. இது குறித்து, கடந்த மாதம் 29ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இது தொடர்பாக, சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேற்று அளித்த விளக்கம்:
புதுக்கோட்டை, மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களில் இருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக பெறப்பட்ட, அறிக்கை விபரங்களின் படி, சத்துணவு மையங்களுக்கான, அனைத்து உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு, போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தினமும் வழங்கப்படும் உணவு குறித்த விபரம், பள்ளி தலைமை ஆசிரியர்களால், அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. காலை உணவு, மதிய உணவு ஆகிய இரண்டு திட்டங்களுக்கும், உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.