தனி நலவாரியம்: பால் முகவர்கள் கோரிக்கை
தனி நலவாரியம்: பால் முகவர்கள் கோரிக்கை
தனி நலவாரியம்: பால் முகவர்கள் கோரிக்கை
ADDED : செப் 23, 2025 06:43 AM

சென்னை; 'பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடும் பால் முகவர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு, தனி நலவாரியம் அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின், 18ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், சென்னை கொளத்துாரில் நடந்தது. மாநில தலைவராக மீண்டும் பொன்னுசாமி தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில், பால் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விதி விலக்கு அளித்து, வரியை குறைத்துள்ள மத்திய அரசுக்கும், ஆவின் பால் விற்பனை முகவர்கள் நலநிதி உருவாக்கி, அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பால் உற்பத்தி, வினியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபடும் பால் முகவர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்காக, தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பால், பால் சார்ந்த பொருட்களின் விற்பனை விலையை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.