Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கருத்து கேட்பு கூட்டம் போதும் இடைநிலை ஆசிரியர்கள் கோபம்

கருத்து கேட்பு கூட்டம் போதும் இடைநிலை ஆசிரியர்கள் கோபம்

கருத்து கேட்பு கூட்டம் போதும் இடைநிலை ஆசிரியர்கள் கோபம்

கருத்து கேட்பு கூட்டம் போதும் இடைநிலை ஆசிரியர்கள் கோபம்

ADDED : செப் 12, 2025 12:21 AM


Google News
சென்னை:'கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது போதும்; இதை கடைசி கூட்டமாக எடுத்துக் கொண்டு, கோரிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம், இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டி.பி.ஐ., அலுவலகத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

கடந்த 2023 ஆங்கில புத்தாண்டு தினத்தன்று, ஊதிய முரண்பாடு தொடர்பாக ஆராய, மூன்று பேர் கொண்ட குழு அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த குழுவின் முதல் கூட்டம், 2023 மார்ச் 10ம் தேதி நடந்தது.

இந்நிலையில், இக் குழுவின் நான்காவது கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை செயலர் சங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என, ஏழு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இது குறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

கூட்டத்தில், சங்கத்திற்கு இருவர் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும், 'சம வேலைக்கு, சம ஊதியம்' தொடர்பான கோரிக்கையை, உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.

மேலும், 'கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியது போதும். பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுங்கள்' என்றும் வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஓய்வூதியம் குறித்த ஆலோசனை

கடைசி கூட்டம் முடிந்தது

'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் கடைசி கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டணி உட்பட 22 அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்று, பழைய ஓய்வூதிய திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறி த்து கோரிக்கை வைத்தனர்.

இக்குழு, வரும் 30ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், தலைமைச் செயலகத்தில், 95 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us