பட்டியல் இன இளைஞர் தற்கொலை: நேர்மையான விசாரணைக்கு பா.ஜ., கோரிக்கை
பட்டியல் இன இளைஞர் தற்கொலை: நேர்மையான விசாரணைக்கு பா.ஜ., கோரிக்கை
பட்டியல் இன இளைஞர் தற்கொலை: நேர்மையான விசாரணைக்கு பா.ஜ., கோரிக்கை
ADDED : ஜூன் 21, 2025 03:30 AM

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மாற்று மத பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய இருந்த ஹிந்து பட்டியல் இன இளைஞர் தனுஷ், துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதுவும், அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே துாக்கிட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் தி.மு.க.,வில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனால், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நன்கு கல்வி கற்று, கோவையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த தனுஷ், காதலிக்கும் பெண்ணின் வீட்டிலேயே துாக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படி இல்லை.
சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கும், தி.மு.க.,வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், தி.மு.க.,வின் வழக்கமான அராஜக போக்கிற்கு காவல் துறை இணங்கி, ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது. ஆளும் தி.மு.க.,வின் அழுத்தத்திற்கு ஆளாகாமல் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.