நிவாரண தொகைக்கு துாய்மை பணியாளர் காத்திருப்பு
நிவாரண தொகைக்கு துாய்மை பணியாளர் காத்திருப்பு
நிவாரண தொகைக்கு துாய்மை பணியாளர் காத்திருப்பு
ADDED : செப் 10, 2025 02:51 AM

திருப்பூர்:'கொரோனா காலத்தில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டபடி, 15,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கங்களின் சம்மேளன (சி.ஐ.டி.யு.,) பொருளாளர் ரங்கராஜ் கூறியதாவது:
கொரோனா பரவலின் போது இரண்டு ஆண்டு காலம், மக்கள், வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது.
தொற்று இல்லாத அளவில், வீதி, வீதியாக, தெரு, தெருவாக துாய்மைப் பணியாளர்கள் சுகாதாரப்பணியில் ஈடுபட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த வீடு, சுற்றுப்புறங்களிலும் கிருமிநாசினி தெளித்து, சுகாதாரப் பணியில் கவனம் செலுத்தினர்.
பெரும் சவாலான காலகட்டத்திலும் முழு ஈடுபாடுடன் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையில், 15,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, தமிழக அரசு அப்போது அறிவித்தது.
இ யல்பு நிலை திரும்பி, ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை, அந்த நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்கவில்லை.
அந்த தொகையை விரைவில் வழங்கவும், பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.