Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சமையலர் சமபந்தி விவகாரம்: முன்னாள் சபாநாயகர் உறுதி

சமையலர் சமபந்தி விவகாரம்: முன்னாள் சபாநாயகர் உறுதி

சமையலர் சமபந்தி விவகாரம்: முன்னாள் சபாநாயகர் உறுதி

சமையலர் சமபந்தி விவகாரம்: முன்னாள் சபாநாயகர் உறுதி

ADDED : ஜன 08, 2024 05:49 AM


Google News
அவிநாசி : திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த, திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிபவர், பாப்பாள். இவர் சமைத்த உணவை குழந்தைகள் சாப்பிடக் கூடாது என பெற்றோர் தடுத்தது தொடர்பாக, 2018ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

'இச்சம்பவம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சமையலர் பாப்பாள் சமைக்கும் உணவை சமபந்தியில் அமர்ந்து சாப்பிட்டு சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்' என, மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சொர்ணம் நடராஜன் வலியுறுத்தி இருந்தார்.

இதன்படி, பள்ளியில் நேற்று முன்தினம் சமபந்தி விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சமபந்தி விருந்திற்கு வெளி ஆட்களை அழைத்து வந்து சாப்பாடு தயார் செய்யப்பட்டதாக, சிலர் குற்றஞ்சாட்டினர்.இதை தொடர்ந்து, 'மீண்டும் ஒரு நாள் சமபந்தி விருந்து நடத்தப்படும்; அன்று சமையலர் பாப்பாள் மட்டுமே சமையல் செய்வார்' என அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அவிநாசி எம்.எல்.ஏ.,வும், முன்னாள் சபாநாயகருமான தனபால் கூறியதாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்து, இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் சமையலர் பாப்பாளுக்கு நடைபெற்ற சம்பவம் வருடத்துக்குரியது. வரும் 31ம் தேதி சமபந்தி விருந்திற்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நாளில் சமையலர் பாப்பாள் வாயிலாக அனைத்து உணவு வகைகளும் தயார் செய்யப்பட வேண்டும். ஜாதி, மத, பேதம் இன்றி அனைத்து தரப்பினரும் சமபந்தியில் அமர்ந்து சாப்பிட வேண்டும். இதற்காக அனைத்து தரப்பு அதிகாரிகளுடன் கலந்து பேசி சுமூகத் தீர்வுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாரு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us