நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் போட்டி போட முடியாத நிலை: முதல்வருக்கு ராகுல் கடிதம்
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் போட்டி போட முடியாத நிலை: முதல்வருக்கு ராகுல் கடிதம்
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் போட்டி போட முடியாத நிலை: முதல்வருக்கு ராகுல் கடிதம்
UPDATED : ஜூலை 14, 2024 05:38 PM
ADDED : ஜூலை 14, 2024 02:54 PM

புதுடில்லி: உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீட் தேர்வு அம்பலப்படுத்தி உள்ளது என முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து ஸ்டாலினுக்கு ராகுல் கடிதம் எழுதி உள்ளார்
அந்தக் கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது: உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீட் அம்பலப்படுத்தி உள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் சமவாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசதி படைத்த சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்பதை தடுக்கும் கூட்டுக் கடமை நமக்கு உண்டு.
பொது மருத்துவ கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இதனை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் கட்டாயம் கண்டிக்க வேண்டும். விளிம்பு நிலை மாணவர்களின் நீதிக்காக காங்கிரஸ் போராடி வருகிறது. 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.