ADDED : ஜன 04, 2024 11:07 PM
ரேஷன் கடைகள் வாயிலாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, ஒரு கார்டுக்கு, 5 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்க கோரினோம். இதை, ஊதிய உயர்வு குழுவும் பரிந்துரைத்தது. ஆனால், கார்டுக்கு, 50 காசு மட்டும் தரப்படுகிறது.
தற்போது, 50 காசு பயன்பாட்டில் இல்லாததால், அதை ஊக்கத்தொகையாக தரக்கூடாது. ஏற்கனவே நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை விரைந்து வழங்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று தமிழகம் முழுதும், ஐந்து மண்டலங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.