டிரான்ஸ்பர் தவிர்க்க ரூ.6 லட்சம் கட்டணம்; பொறியாளர்கள் புகாரால் திடீர் சலசலப்பு
டிரான்ஸ்பர் தவிர்க்க ரூ.6 லட்சம் கட்டணம்; பொறியாளர்கள் புகாரால் திடீர் சலசலப்பு
டிரான்ஸ்பர் தவிர்க்க ரூ.6 லட்சம் கட்டணம்; பொறியாளர்கள் புகாரால் திடீர் சலசலப்பு

ஆர்வம்
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டிலும், மானிய கோரிக்கை தாக்கலின்போதும், பல்வேறு கட்டுமான திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் பணிபுரிய பொறியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் வாயிலாக பணியிட மாற்றம் பெற்று, அந்த புதிய பணியிடத்திற்கு வருகின்றனர்.
மறுப்பு
இதில், பணி ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு குறைவாக உள்ளவர்களும் மாற்றப்பட்டு உள்ளனர். செல்வாக்கான இடத்தை பெறவும், அதே இடத்தை தக்க வைக்கவும், 6 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாக, ஒரு தரப்பினரால் புகார் கூறப்படுகிறது. இதையெல்லாம், துறையின் மேலதிகாரிகள் மறுத்துள்ள போதிலும், இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் சங்க நிர்வாகிகள் வாயிலாக, முதன்மை தலைமை பொறியாளரிடமும், அமைச்சரிடமும் முறையிட தயாராகி வருகின்றனர்.