Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இலங்கை வசம் உள்ள படகுகளுக்கு நிதியுதவி வழங்க ரூ.6 கோடி ஒதுக்கீடு

இலங்கை வசம் உள்ள படகுகளுக்கு நிதியுதவி வழங்க ரூ.6 கோடி ஒதுக்கீடு

இலங்கை வசம் உள்ள படகுகளுக்கு நிதியுதவி வழங்க ரூ.6 கோடி ஒதுக்கீடு

இலங்கை வசம் உள்ள படகுகளுக்கு நிதியுதவி வழங்க ரூ.6 கோடி ஒதுக்கீடு

ADDED : மே 22, 2025 01:38 AM


Google News
சென்னை:இலங்கை கடற்படையினரால், சிறை பிடிக்கப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த விசைப்படகு மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளின் உரிமையாளர்களுக்கு, நிதியுதவி வழங்க, தமிழக அரசு சார்பில் 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு, மீட்க இயலாத நிலையில் உள்ள, தமிழகத்தை சேர்ந்த விசைப்படகுகளுக்கு, தலா 6 லட்சம், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளுக்கு, தலா 2 லட்சம் ரூபாய், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.

கடந்த மார்ச் 3ம் தேதி, விசைப்படகுகளுக்கு வழங்கும் நிவாரணத் தொகையை, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதன்படி, படகின் உரிமையாளர்களுக்கு, காசோலை வாயிலாக அல்லது அஞ்சல் சேமிப்பு கணக்கு வாயிலாக, நிவாரணத் தொகை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த 2024 முதல் 2025ம் ஆண்டு, பிப்., மாதம் வரை, 73 விசைப்படகுகள், ஒன்பது இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகள், இலங்கை வசம் உள்ளன.

'இவற்றின் உரிமையாளர்களுக்கு நிதியுதவி அளிக்க, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை விரைவில் வழங்கப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us