மூட்டை நெல்லுக்கு ரூபாய் 40 லஞ்சம்
மூட்டை நெல்லுக்கு ரூபாய் 40 லஞ்சம்
மூட்டை நெல்லுக்கு ரூபாய் 40 லஞ்சம்
ADDED : அக் 01, 2025 07:30 AM

விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை, அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். ஆனால், அங்கு விவசாயிகள், பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நெல் மூட்டைகளை உடனுக்குடன் எடை போடாமல் தாமதப்படுத்துகின்றனர். இதனால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைகின்றன. அதன்பின், ஈரப்பதத்தை காரணம் காட்டி குறைவான விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். ஒரு மூட்டை நெல்லுக்கு, 40 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்; இதற்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும்
. -- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,


