கருப்பட்டியை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை
கருப்பட்டியை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை
கருப்பட்டியை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை
ADDED : மார் 22, 2025 06:31 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சீசனை முன்னிட்டு கருப்பட்டி தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. இவர்களிடம் மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரை தரத்திற்கு ஏற்ப வாங்கி வெளி மார்க்கெட்டில் ரூ.350 வரை விற்கின்றனர்.
சாயல்குடி பகுதி பனைத்தொழிலாளர்கள் கூறியதாவது: ஒரு கிலோ தரமான பனங்கருப்பட்டி தயாரிக்க ரூ.200 வரை செலவாகும். மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். இதனால் விலையின்றி பாதிக்கப்படுகிறோம்.
குறைந்தப்பட்சம் கிலோவிற்கு ரூ.300 வரை விலை கிடைக்க வேண்டும். அரசே பனங்கருப்பட்டிக்கு விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்றனர்.