ரோடுகளில் திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ரோடுகளில் திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ரோடுகளில் திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 23, 2025 07:15 AM

சிவகாசி : சிவகாசி பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப், வேலாயுதம் ரஸ்தா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். ரோட்டில் திரியும் மாடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி சாட்சியாபுரம் மேம்பாலம் பணிகள் நடந்து வருவதை ஒட்டி நகர் முழுவதும் முக்கிய ரோடுகளில் போக்குவரத்தில் சிரமம் ஏற்படுகிறது. இந்த ரோடுகளில் மாடுகள் நடமாடுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது.
சிவகாசி பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப்பில் ரோட்டில் திரியும் மாடுகளால் பள்ளி மாணவர்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதேபோல் வேலாயுத ரஸ்தா ரோடு முக்கிய மாற்றுப் பாதையாக உள்ளது. அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டில் தான் சென்று வருகின்றன. மேலும் இந்த ரோட்டை கடந்து தான் ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இந்நிலையில் வேலாயுத ரஸ்தா ரோட்டில் எந்நேரமும் மாடுகள் நடமாடுகின்றது. இதனால் எந்த வாகனமும் எளிதில் சென்று வர முடியவில்லை. மாடுகள் விலகிச் செல்வதற்காக ஹாரன் அடித்தாலும் இவைகள் கொஞ்சம் கூட நகர்வதில்லை.
ஒரு சில மாடுகள் பயந்து ஓடி வாகன ஓட்டிகளை விபத்திற்கு உள்ளாக்குகிறது. அவசரத்திற்கு வருகின்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் இதே நிலைதான் ஏற்படுகின்றது. எனவே நகர் பகுதியில் நடமாடுகின்ற மாடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.