ADDED : ஜன 13, 2024 01:35 AM
சென்னை:மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ள அரசாணை:
2022ல் இருந்து முதுநிலை மருத்துவ படிப்பை நிறைவு செய்த அரசு சேவை சாரா மருத்துவ மாணவர்களின்ஒப்பந்த காலம் இரண்டு ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்படுகிறது.
ஒப்பந்தத்தை நிறைவு செய்யாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை, முதுநிலை பட்ட படிப்புகளுக்கு 40 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாகவும்; முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு, 20 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.