ADDED : மார் 27, 2025 06:28 PM

எல்லாப் புகழும்...
பலரும் தங்களை புகழ்ந்து பேச வேண்டும் என மனிதன் அலைகிறான். இது தவறு என்பதை கீழ்க்கண்ட சம்பவம் விளக்குகிறது. நபிகள் நாயகம் பள்ளிவாசலில் தொழுகை செய்யும் முன், உளு (கை, கால்களை கழுவுதல்) செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது கையில் இருந்து வழிந்த தண்ணீரை தோழர்கள் சிலர் கைகளில் பிடித்து தங்களின் உடலைக் கழுவினர்.
அவர்களிடம், ''எதற்காக இப்படி செய்தீர்கள்'' எனக் கேட்டார் நாயகம். ''உங்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்தோம்'' என்றனர். ''தோழர்களே... உங்கள் அன்பைக் காட்டும் வழி இதுவல்ல. என்னை மனப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்றால், நான் எதைச் செய்கிறேனா அதைச் செய்யுங்கள். நான் விலக்குவதை விலக்கி விடுங்கள். என் கொள்கைகளை ஏற்று பின்பற்றுங்கள். அதை விட்டு இதுபோல் செய்யாதீர்கள்.
எவரேனும் முகஸ்துதி (புகழ்ந்தால்) செய்தால் அவர்களின் முகங்களில் மண்ணை வாரி அடியுங்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்றார்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி