பதவி விலகுவதே பழனிசாமிக்கு நல்லது * பன்னீர்செல்வம் சொல்கிறார்
பதவி விலகுவதே பழனிசாமிக்கு நல்லது * பன்னீர்செல்வம் சொல்கிறார்
பதவி விலகுவதே பழனிசாமிக்கு நல்லது * பன்னீர்செல்வம் சொல்கிறார்
ADDED : மார் 27, 2025 06:52 PM
சென்னை:''அ.தி.மு.க.,வில் இணைய வேண்டும் என சொல்லவில்லை, பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றாக இணைந்தால் தான், தேர்தலில் வெற்றி பெற முடியும் என்கிறேன்,'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி;
அ.தி.மு.க., அலுவலகத்தில், தவறான ஒரு பொதுக்குழுவை கூட்டி இருந்தனர். நாங்கள் அங்கு சென்றோம். எங்களை வழிமறித்து, கட்சியின் சென்னை மாவட்டச்செயலர்கள், நாங்கள் வந்த வாகனத்தை தாக்கினர்; இது தான் நடந்த உண்மை.
எங்களை தாக்கும்போது, அவர்களாகவே அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து, அடியாட்களை வைத்து, அடித்து உடைத்து விட்டு, எங்கள் மீது பழி போடுகின்றனர். அ.தி.மு.க.,வில் நான் இணைய வேண்டும் என சொல்லவில்லை, பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றாக இணைந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்கிறேன்.
அ.தி.மு.க., எந்த காலத்திலும் பெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில், அ.தி.மு.க.,வின் பழனிசாமி தொடர்ந்து செயல்படுகிறார். ஒற்றைத் தலைமை வந்தால், அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவேன் என, அவர் கூறினார். ஆனால், அவர் தலைமைக்கு வந்தபின், ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை.
அதனால், அவராகவே பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை. இல்லையெனில், அவமரியாதையை கட்டாயம் சந்திப்பார்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.