பா.ஜ., கூட்டணிக்கு விஜய் வர மாட்டார் காரணம் சொல்கிறார் ராம சீனிவாசன்
பா.ஜ., கூட்டணிக்கு விஜய் வர மாட்டார் காரணம் சொல்கிறார் ராம சீனிவாசன்
பா.ஜ., கூட்டணிக்கு விஜய் வர மாட்டார் காரணம் சொல்கிறார் ராம சீனிவாசன்
ADDED : ஜூன் 16, 2025 04:15 AM

திண்டுக்கல்: ''பா.ஜ., கூட்டணிக்கு விஜய் வரமாட்டார்,'' என, பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசின் திட்டங் களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நெல் கொள்முதல் முதல், தெரு நாய்களை கட்டுப்படுத்துவது வரை மத்திய அரசு நிதி தருகிறது.
பா.ஜ.,வை ஆள விடமாட்டோம் என இங்கிருப்பவர்கள் சொல்ல முடியாது. முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகத்தையே ஆள தெரியவில்லை.
கட்சி துவங்கியபோது, டார்ச்லைட் வைத்து, நீதியை கமல் தேடினார். இப்போது, நாம் தான் டார்ச்லைட் அடித்து, அந்த மானஸ்தன் கமலை தேட வேண்டியிருக்கிறது.
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு, தே.மு.தி.க., --- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் வரும். 'நடிகர் விஜயை முதல்வராக்கி பார்க்க வேண்டும்' என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். எனவே, பா.ஜ., கூட்டணிக்கு விஜய் வர மாட்டார்.
கூட்டணி ஆட்சிக்கும், கூட்டணி கட்சிகளின் ஆட்சி என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என கூறுவது வழக்கம். அப்படித்தான், அமித் ஷாவும் கூறினார்.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைத்தாலும், அதை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்றே கூறுவோம். தமிழக அமைச்சரவையில் பங்கு பெறுவது குறித்து அமித் ஷா முடிவு செய்வார். வேறு யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.