பழைய ஓய்வூதியம் கேட்டு ரயில்வே ஊழியர் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியம் கேட்டு ரயில்வே ஊழியர் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியம் கேட்டு ரயில்வே ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 31, 2024 12:48 AM
சென்னை:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில்வேயில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, டி.ஆர்.இ.யு., எனப்படும், தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், ''ரயில்வேயில், 2004ம் ஆண்டுக்கு பின், பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவேண்டும்,''என்றார்.
தட்சிண ரயில்வே பென்ஷன் சங்க தலைவர் இளங்கோவன் பேசுகையில், ''புதிய திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் போது, 23,000 ரூபாய்க்கு பதிலாக, 2,300 ரூபாய் தான் பெற முடியும். புதிய ஓய்வூதிய திட்டத்தில் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், டி.ஆர்.இ.யு., தலைவர் சுகுமாறன், செயல் தலைவர் ஜானகிராமன், பொதுச்செயலர் ஹரிலால் பேசினர்.