ஜிப்மர் ஊழியர் கொலை புதுச்சேரியில் பயங்கரம்
ஜிப்மர் ஊழியர் கொலை புதுச்சேரியில் பயங்கரம்
ஜிப்மர் ஊழியர் கொலை புதுச்சேரியில் பயங்கரம்
ADDED : பிப் 12, 2024 06:10 AM

புதுச்சேரி : புதுச்சேரி, பிச்சைவீரன்பேட் வடக்கு கிணறு வீதியை சேர்ந்தவர் அமுத ஆனந்தன், 28; ஜிப்மர் ஒப்பந்த ஊழியர். நேற்று முன்தினம் நள்ளிரவு, தன் நண்பர்களுடன் ஜான்குமார் நகர் விரிவாக்கத்தில், காலிமனையில் மது அருந்தியுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல், அங்கு மது அருந்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அமுத ஆனந்தனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. அவர் மயங்கி விழுந்தார். அவரது நண்பர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். ரெட்டியார்பாளையம் போலீசார் தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.