அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்
அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்
அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்
ADDED : ஜன 12, 2024 11:49 PM

சென்னை:தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை நியமித்து, தமிழக கவர்னர் ரவி உத்தரவிட்டு உள்ளார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2021 மே மாதம், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
இவர், சில தினங்களுக்கு முன், தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்த தமிழக அரசு, தலைமை வழக்கறிஞராக வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை நியமிக்க பரிந்துரை செய்தது.
அதையேற்று, அவரை தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்து, கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையை, அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பி.எஸ்.ராமன் ஏற்கனவே, 2009 - 2011ம் ஆண்டுகள் வரை, கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியில் தன் 49வது வயதில், தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தவர்.