Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நெல்லை, துாத்துக்குடிக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள்

நெல்லை, துாத்துக்குடிக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள்

நெல்லை, துாத்துக்குடிக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள்

நெல்லை, துாத்துக்குடிக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள்

ADDED : ஜன 11, 2024 12:16 AM


Google News
சென்னை:பொங்கல் பண்டிகை முன்னிட்டு, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களும், தாம்பரம் - துாத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

 தாம்பரத்தில் இருந்து இன்றும், 13, 16ம் தேதிகளிலும், இரவு 9:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:15 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்லும்

 திருநெல்வேலியில் இருந்து நாளையும், 14, 17ம் தேதிகளிலும் மதியம் 2:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்

இந்த சிறப்பு ரயில்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, கடையநல்லுார், தென்காசி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் நேற்று அறிவித்த சில நிமிடங்களில், டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. 'ஏசி' வகுப்பில் மட்டும் சில டிக்கெட்டுகள் இருந்தன.

முன்பதிவு இல்லாத ரயில்


 தாம்பரத்தில் இருந்து, வரும் 14, 16ம் தேதிகளில், காலை 7:30 மணிக்கு புறப்படும் முன்பதிவு தேவையில்லாத சிறப்பு ரயில், அதே நாள் இரவு 10:45 மணிக்கு துாத்துக் குடிக்கு செல்லும்

 துாத்துக்குடியில் இருந்து, வரும் 15, 17 ஆகிய தேதிகளில் காலை 6:00 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில், அதே நாள் இரவு 8:30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us