ADDED : ஜன 03, 2024 12:20 AM
சென்னை:தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில், 1,000 ரூபாய் ரொக்கம் இடம் பெறாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு, தமிழகத்தில் 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொருட்களை கொள்முதல் செய்ய, 238 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நேற்று இரவு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் பணம் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால், அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கம் குறித்து அறிவிப்பு இல்லை. இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இருப்பினும், பணம் வழகுவது குறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.