பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்
ADDED : மே 14, 2025 10:17 PM

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை என வழங்கப்பட்டுள்ள கடுமையான தண்டனை, குற்றசெயலில் ஈடுபட முனைவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையான இருக்கும்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேற்று ( மே 13) தீர்ப்பு வழங்கிய கோவை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 85 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ளது.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டும் அல்லாமல், நீதிமன்ற விசாரணைக் குழு ஒத்துழைப்பு அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.
அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. அந்த வகையில் நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகி ரூ.95 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.