Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; வாலிபரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; வாலிபரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; வாலிபரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; வாலிபரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!

UPDATED : ஜூன் 17, 2025 02:56 PMADDED : ஜூன் 17, 2025 01:37 PM


Google News
Latest Tamil News
சென்னை: பண்ருட்டி அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சுந்தரவேலை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.வழக்கில் அவரை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கியதால் சுட்டுப்பிடித்தனர். இதனால் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.

இபிஎஸ் கண்டனம்

மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை:

போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில்,

80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில், தமிழகம் எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.

6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, 'அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய' அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த தி.மு.க., ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இது போன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, போலீசாரை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026ல் இந்த தி.மு.க., அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us