ஆர்.டி.ஓ.,வுக்கு மிரட்டல் போலீசார் விசாரணை
ஆர்.டி.ஓ.,வுக்கு மிரட்டல் போலீசார் விசாரணை
ஆர்.டி.ஓ.,வுக்கு மிரட்டல் போலீசார் விசாரணை
ADDED : செப் 01, 2025 06:28 AM
கடலுார் : கடலுார் வருவாய்த்துறை ஆர்.டி.ஓ.,வை, தொலைபேசியில் மிரட்டியவர் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் வருவாய்த்துறையில் ஆர்.டி.ஓ., வாக இருப்பவர் அபிநயா, இவர், அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, கடந்த 22ம் தேதி அவரது மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ஆர்.டி.ஓ., வை ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். பேசியவர் யார் என கேட்பதற்குள் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதுகுறித்து அபிநயா, கடலுார் புதுநகர் போலீசில் புகார் செய்தார்.
சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.