/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பன்னப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பன்னப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பன்னப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பன்னப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பன்னப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : செப் 01, 2025 06:29 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பன்னப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
ஊராட்சி தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமை கீரப்பாளையம் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் பாலு தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்தன், சிதம்பரம் தாசில்தார் கீதா, சிறப்பு தாசில்தார் அரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பன்னப்பட்டு, சிறுகாலுார், முகையூர், அய்யனுார், அக்ராமங்கலம் உள்ளிட்ட நான்கு ஊராட்சியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுக்களை கொடுத்தனர்.
ஊரக வளர்ச்சி, வேளாண்துறை, மின்சாரம், வருவாய், தோட்டக்கலை உள்ளிட்ட 16 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாயகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர்கள் சரவணன், ஆனந்தபாரதி, மருத்துவ அதிகாரி புவனேஸ்வரி, தி.மு.க. நிர்வாகிள் சுந்தவேல், பாபு, எழில்மாறன், தேசிங்கு, குமரன், அன்பரசன், ராஜமாணிக்கம், பழனிசாமி, கனகசபை, குமரவேல், வினோத், திருமாள், வேல்முருகன், கண்ணன் காண்டியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.