டீ கடைகளில் பிரச்னை பண்ணாதீங்க 'ப்ளீஸ்'; கட்சியினருக்கு திருமா 'அட்வைஸ்'
டீ கடைகளில் பிரச்னை பண்ணாதீங்க 'ப்ளீஸ்'; கட்சியினருக்கு திருமா 'அட்வைஸ்'
டீ கடைகளில் பிரச்னை பண்ணாதீங்க 'ப்ளீஸ்'; கட்சியினருக்கு திருமா 'அட்வைஸ்'
ADDED : ஜூன் 12, 2025 03:54 AM

சென்னை: 'திருச்சி கூட்டத்துக்கு வருவோர், டீக்கடை, ஹோட்டல்களில் பிரச்னை செய்யக்கூடாது' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அக்கட்சியினரை அறிவுறுத்தி உள்ளார்.
வக்ப் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, 'மதச்சார்பின்மையை காப்போம்' என்ற பெயரில் பேரணியை, திருச்சியில் நாளை மறுநாள் வி.சி.க., நடத்துகிறது.
இதுகுறித்து, திருமாவளவன் கூறியதாவது:
பேரணியில் பங்கேற்பவர்கள், கட்சிக்கொடியின் நீல நிற ஆடை அணிந்து வர வேண்டும். 'கோட் சூட்' அணிந்தும் பங்கேற்கலாம். பெண்களுக்கு, பிரத்யேக 'மொபைல் டாய்லெட்' அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்களும் தயாராக உள்ளன.
தமிழகம் முழுதும் இருந்து வரும் கட்சியினர், வாகனங்களை ஏதேனும் ஒரு இடத்தில் நிறுத்தி, 'உணவு அருந்தினோம்; குடிநீர் அருந்தினோம்; டீ அருந்தினோம்; அதனால் பிரச்னை ஏற்பட்டது' என்ற சூழலை ஏற்படுத்தக்கூடாது. அதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது.
தங்கள் ஊர்களில் இருந்தே உணவு, குடிநீர் எடுத்து வர வேண்டும். எதற்காகவும் இடையில் வண்டியை நிறுத்த வேண்டாம்.
இந்த விஷயத்தில், கட்சியின் ஒவ்வொரு தொண்டனும் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.