பட்டா மாற்றம் பதிவு செய்வதில் மக்கள் அவதி
பட்டா மாற்றம் பதிவு செய்வதில் மக்கள் அவதி
பட்டா மாற்றம் பதிவு செய்வதில் மக்கள் அவதி
ADDED : ஜன 03, 2024 12:02 AM
சென்னை:'இணையவழியில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் உட்பிரிவு விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை' என, பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பொது மக்கள் கூறியதாவது:
தமிழகம் முழுதும், இ - சேவை மையங்கள் வாயிலாகவே பட்டா மாறுதல், உட்பிரிவு கோரும் மனுக்கள் பதிவாகின்றன. இதில், சமீபத்தில் துவங்கப்பட்ட, 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்துக்கான இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால், இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்வதிலும், அதன் நிலவரம் அறிவதிலும் குழப்பம் ஏற்படுகிறது.
குறிப்பாக, உட்பிரிவு தேவைப்படும் விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை. அப்படியே பதிவு செய்தாலும், அதன் நிலவரம் அறிய முடியாத நிலை எற்பட்டு உள்ளது.
இதற்கான இணையதளத்தை அணுகினால், 'மக்களுடன் முதல்வர்' திட்ட விண்ணப்ப எண் கேட்கப்படுகிறது. இதனால், வீடு வாங்கியவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வருவாய் துறை அதிகாரிகள், இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.