காணும் பொங்கலையொட்டி பூம்புகார் கடற்கரையில் திரண்ட மக்கள்
காணும் பொங்கலையொட்டி பூம்புகார் கடற்கரையில் திரண்ட மக்கள்
காணும் பொங்கலையொட்டி பூம்புகார் கடற்கரையில் திரண்ட மக்கள்
ADDED : ஜன 17, 2024 07:47 PM

மயிலாடுதுறை:தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான புதன்கிழமை காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதை ஒட்டி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். இன்று காணும் பண்டிகை ஒட்டி பிரசித்தி பெற்ற பூம்புகார் சுற்றுலா தளத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். பூம்புகார் கடற்கரையில் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து, விளையாடி, உணவருந்தி மகிழ்ந்தனர். பூம்புகார் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


