ADDED : செப் 14, 2025 06:10 AM

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகை கடன் உட்பட பல வகை கடன்கள் வழங்கப்படுகின்றன.
இதில், பண்ணைசாரா கடன் வாங்கிய சிலர், பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அசலை இன்னும் செலுத்தாமல் உள்ளனர்.
எனவே, நீண்டகால நிலுவை கடன்களை வசூலிக்க, சிறப்பு கடன் தீர்வு திட்டத்தை, 2023ல் கூட்டுறவு துறை துவக்கியது.
இந்த திட்டத்தின் கீழ், 2.10 லட்சம் பேரிடம் இருந்து, 910 கோடி ரூபாய் கடன் வசூலிக்கப்பட வேண்டும். இத்திட்டத்திற்கான அவகாசம், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்தது.
பின், இம்மாதம் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கு, இன்னும் 10 நாட்களே உள்ளன. இதுவரை, 45,010 பேரிடம் இருந்து, 220 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.