கடன் பெற்று தருவதாக மோசடி தனியார் நிறுவன இயக்குநர் கைது
கடன் பெற்று தருவதாக மோசடி தனியார் நிறுவன இயக்குநர் கைது
கடன் பெற்று தருவதாக மோசடி தனியார் நிறுவன இயக்குநர் கைது
ADDED : செப் 14, 2025 06:06 AM

சென்னை:குறைந்த வட்டியில், 100 கோடி ரூபாய் வரை கடன் பெற்று தருவதாக விளம்பரம் செய்து மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குநரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில், 'செவன் ஹீல்ஸ் குளோபல் சொல்யூசன்' என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், குறைந்த வட்டியில், 100 கோடி ரூபாய் வரை கடன் பெற்று தருவதாக விளம்பரம் செய்தது. இதை நம்பிய ஒருவர், 3 கோடி ரூபாய் கடன் பெற, 27 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளார்.
ஆனால், முன்பணத்தையும் தராமல், கடனையும் பெற்றுத் தராததால், பாதிக்கப்பட்டவர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்படி, வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்நிறுவனத்தின் இயக்குநர் ரகு என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவியை, 99401 93338 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.