ஊரக வளர்ச்சி பணிகளை கணினி மயமாக்க உத்தரவு
ஊரக வளர்ச்சி பணிகளை கணினி மயமாக்க உத்தரவு
ஊரக வளர்ச்சி பணிகளை கணினி மயமாக்க உத்தரவு
ADDED : ஜன 08, 2024 06:07 AM
சென்னை : ஊரக வளர்ச்சித் துறை பணிகளை, அனைத்து நிலையிலும், சீரிய முறையில் கண்காணிக்க, துவக்கம் முதல் முடிவு வரை கணினிமயமாக்குதல், 5 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்படும் என, சட்டசபையில் துறை அமைச்சர் அறிவித்துஇருந்தார்.
இதற்கான கமிட்டி அளித்த பரிந்துரை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பரிந்துரை அடிப்படையில், ஊரக வளர்ச்சித்துறை பணிகளை கணினிமயமாக்கும் பொறுப்பை, தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.