Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ வருவாய் நீதிமன்றங்களில் 'ஆன்லைன்' மனு வசதி

வருவாய் நீதிமன்றங்களில் 'ஆன்லைன்' மனு வசதி

வருவாய் நீதிமன்றங்களில் 'ஆன்லைன்' மனு வசதி

வருவாய் நீதிமன்றங்களில் 'ஆன்லைன்' மனு வசதி

ADDED : ஜூன் 10, 2025 03:26 AM


Google News
சென்னை : பட்டா மாறுதல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்டோர், 'ஆன்லைன்' வழியே, வருவாய் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் வீடு, மனை வாங்கியோர், அதற்கான பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பத்திரப்பதிவு முடிந்ததும், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

இது தொடர்பான பணிகளை எளிமைப்படுத்த, வருவாய் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், பட்டா மாறுதல் மற்றும் புதிய பட்டா வழங்கல் போன்றவற்றில் பிழைகள், ஆட்சேபனைகள் எழலாம்.

இத்தகைய சூழலில், வருவாய் நீதிமன்றங்களை பொதுமக்கள் அணுக வேண்டியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, திருச்சி, லால்குடி, மன்னார்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலுார், மதுரை, திருநெல்வேலி என, 10 இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

இவற்றுக்கு நேரில் சென்று, மனு தாக்கல் செய்வதில் பல்வேறு நடைமுறை பிரச்னைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான வருவாய் நீதிமன்றங்கள், டெல்டா மாவட்டங்களிலேயே அமைந்துள்ளதால், பிற மாவட்ட மக்கள், நீண்ட துாரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, ஆன்லைன் வழியே மனு தாக்கல் செய்யும் வசதியை அரசு ஏற்படுத்த உள்ளது.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பட்டா தொடர்பான மேல் முறையீட்டு மனுக்களை, வருவாய் நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன. இப்பணிகளை, படிப்படியாக ஆன்லைன் முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மனுக்களை தாக்கல் செய்ய, ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, பொதுமக்கள் தங்கள் மனுக்களை, இணையதளம் வாயிலாக அல்லது இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவு செய்யலாம்.

இதனால், மனு தாக்கலுக்காக மக்கள் அலைய வேண்டியதில்லை. ஆன்லைன் வசதிக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us