தி.மு.க.,வுக்கு ஓட்டு இல்லை என்பது நன்றி கெட்ட செயல் ஜவாஹிருல்லா காட்டம்
தி.மு.க.,வுக்கு ஓட்டு இல்லை என்பது நன்றி கெட்ட செயல் ஜவாஹிருல்லா காட்டம்
தி.மு.க.,வுக்கு ஓட்டு இல்லை என்பது நன்றி கெட்ட செயல் ஜவாஹிருல்லா காட்டம்
ADDED : ஜூலை 04, 2025 01:47 AM
தஞ்சாவூர: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா அளித்த பேட்டி:
இஸ்லாமியர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லை. உதாரணமாக, லோக்சபாவில் 543 எம்.பி.,க்களில், 80 இஸ்லாமியர்கள் எம்.பி.,யாக இருக்க வேண்டும்; ஆனால், 24 பேர் தான் உள்ளனர். அரசியல் ரீதியில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதால், சமூக பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட நிலைகளில் இஸ்லாமியர்கள் பின்தங்கி உள்ளதாக ராஜேந்திர சச்சார் அறிக்கை கூறுகிறது.
எனவே, மக்கள் தொகைக்கு ஏற்ப இஸ்லாமியர்களுக்கு லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். தி.மு.க., மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொகுதி மறுவரையறையில், இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய தொகுதிகள் எல்லாம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது தி.மு.க., தான். முன்னாள் முதல்வர் கருணாநிதி 3.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்தார். அதற்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதற்கிடையில், இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. அதை செய்யாத தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டோம் என கூறுவது நன்றி கெட்ட செயல்.
லாக் அப் மரணம் என கூறுவதைவிட, காவல் படுகொலை என சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். திருப்புவனம் காவலாளி கொலை வழக்கில், சட்ட விரோத விசாரணைக்கு உத்தரவிட்ட அந்த அதிகாரி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும். தமிழக போலீசார் இந்த வழக்கை விசாரித்தால், அதில் நியாயம் இருக்காதோ என்ற அச்சத்தில் தான், சி.பி.ஐ., விசாரணைக்கு விட்டுள்ளார் தமிழக முதல்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.