யாரும் அழைக்கவில்லை தே.மு.தி.க., தகவல்
யாரும் அழைக்கவில்லை தே.மு.தி.க., தகவல்
யாரும் அழைக்கவில்லை தே.மு.தி.க., தகவல்
ADDED : பிப் 24, 2024 02:31 AM
சென்னை:''தேர்தல் கூட்டணி தொடர்பாக, எங்களை யாரும் அழைக்கவில்லை. நாங்கள் யாருடனும் பேச்சு நடத்தவில்லை,'' என, தே.மு.தி.க., துணைப் பொதுச்செயலர் பார்த்தசாரதி தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சைத் துவக்கி உள்ளன. பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளுடன், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தனித்தனியே பேச்சு நடத்தி வருவதாகவும், இரு கட்சிகளும் ராஜ்யசபா எம்.பி., 'சீட்' ஒன்று கண்டிப்பாக வேண்டும் என்பதால், இழுபறி நீடிப்பதாகவும், தகவல் வெளியானது.
தே.மு.தி.க.,வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்க, அ.தி.மு.க., முன் வந்துள்ளதாக, நேற்று காலை தகவல் பரவியது. இது குறித்து, தே.மு.தி.க., துணைப் பொதுச்செயலர் பார்த்தசாரதியிடம் கேட்டபோது, ''நாங்கள் இதுவரைக்கும் யாருடனும் பேச்சு நடத்தவில்லை. இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களை யாரும் அழைக்கவும் இல்லை,'' என்றார்.