சென்னையில் வரும் 26ம் தேதி என்.எல்.சி., உயர்மட்டக் குழு கூட்டம்
சென்னையில் வரும் 26ம் தேதி என்.எல்.சி., உயர்மட்டக் குழு கூட்டம்
சென்னையில் வரும் 26ம் தேதி என்.எல்.சி., உயர்மட்டக் குழு கூட்டம்
ADDED : மே 22, 2025 03:55 AM
கடலுார்: நெய்வேலி என்.எல்.சி., சொசைட்டி தொழிலாளர்களின் 17 அம்ச கேரிக்கைகள் குறித்த முதல் கூட்டம் வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கிறது.
நெய்வேலி என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், 17 அம்ச கோரிக்கைகள் குறித்து தொடர் போராட்டங்கள் நடத்தியது. இதற்கு எந்த தீர்வும் காணப்படவில்லை. என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் உயர் மட்டக் குழு அமைத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் பேசி தீர்வு காண வேண்டும் என கடந்த 4.10.2024ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் மத்திய நிலக்கரித்துறை அரசு செயலர், மத்திய தொழிலாளர் ஆணையர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் என்.எல்.சி., நிறுவனம் என்.எல்.சி., ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களின் 17 அம்ச கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலக்கரி சுரங்க அரசு செயலர் மற்றும் மத்திய தொழிலாளர் ஆணையர் தலைமையில் உயர்மட்ட குழு வரும் 26ம் தேதி சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் முதல் கூட்டம் நடப்பதாக ஜீவா உள்ளிட்ட என்.எல்.சி., தொழிற்சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளுக்கு உயர்மட்டக் குழு ஆறு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும் என, ஜீவா சங்க சிறப்பு செயலாளர் சேகர் தெரிவித்தார்.