ஐ.எஸ்., பயங்கரவாதியிடம் என்.ஐ.ஏ., விசாரணை
ஐ.எஸ்., பயங்கரவாதியிடம் என்.ஐ.ஏ., விசாரணை
ஐ.எஸ்., பயங்கரவாதியிடம் என்.ஐ.ஏ., விசாரணை
ADDED : ஜூன் 05, 2025 11:45 PM
சென்னை:மயிலாடுதுறை அருகே, திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்தவர் அல்பாசித், 26. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார்.
இவரை, ஜனவரி மாதம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்பாசித்தை நேற்று முன்தினம், சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.
அப்போது, தன்னால் மூளைச்சலவை செய்து, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்பட்ட நபர்கள் குறித்து, அல்பாசித் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 27; மாவோயிஸ்ட் இயக்கத்தை இவர், 2017ல், கேரள மாநிலத்தில் உள்ள, வனப்பகுதியில் ஆயுத பயிற்சி பெற்றார். சில மாதங்களுக்கு முன், கோவையில் பதுங்கி இருந்த சந்தோஷ்குமாரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இவரையும், ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது, 'மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மூளைச்சலவை செய்து, ஆயுத பயிற்சி அளித்தார்' என, வாக்குமூலம் அளித்துள்ளார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.