/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தரமணியில் தீர்க்கப்படாத குடிநீர் பிரச்னை ஆர்ப்பாட்டம் செய்த அ.தி.மு.க.,வினர் கைது தரமணியில் தீர்க்கப்படாத குடிநீர் பிரச்னை ஆர்ப்பாட்டம் செய்த அ.தி.மு.க.,வினர் கைது
தரமணியில் தீர்க்கப்படாத குடிநீர் பிரச்னை ஆர்ப்பாட்டம் செய்த அ.தி.மு.க.,வினர் கைது
தரமணியில் தீர்க்கப்படாத குடிநீர் பிரச்னை ஆர்ப்பாட்டம் செய்த அ.தி.மு.க.,வினர் கைது
தரமணியில் தீர்க்கப்படாத குடிநீர் பிரச்னை ஆர்ப்பாட்டம் செய்த அ.தி.மு.க.,வினர் கைது
ADDED : ஜூன் 05, 2025 11:43 PM

சென்னை :அடையாறு மண்டலம், 178வது வார்டு, தரமணி, மஹாத்மா காந்தி நகர், பாரதி நகர், பெரியார் நகர் பகுதிகளில், பல மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகிக்கவில்லை.
குறைவாக வரும் குடிநீரும் துர்நாற்றத்துடன், சுகாதார சீர்கேடாக வருவதாக கூறி, அவ்வப்போது அப்பகுதிவாசிகள் ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், இதுவரை குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண, வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில், விஜயநகர் பேருந்து நிலையம் அருகே, குடிநீர் வாரியத்தை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தென்சென்னை மாவட்ட செயலர் அசோக் உட்பட, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சம்பவம் அறிந்துவந்த வேளச்சேரி போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, முன்னாள் அமைச்சர் உட்பட, 200 பேரை கைது செய்து, சேவா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.
பழனிசாமி கண்டனம்
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை தி.மு.க., அரசு ஒடுக்குவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தரமணியில் நிலவும் குடிநீர் பிரச்னையை சரிசெய்யாத தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்று, அ.தி.மு.க., நடத்திய மக்களுக்கான போராட்டத்தை, அராஜகப் போக்குடன் எதற்கு ஒடுக்க வேண்டும்?
எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என, முழுதுமாக ஒடுக்கக்கூடிய ஒரு அரசை, பாசிச மாடல் அரசு என்று சொல்லாமல், வேறென்ன சொல்வது?
வெற்று விளம்பரங்களாலும், எதிர்க்குரல்களை ஒடுக்குவதாலும், தங்கள் ஆட்சி மீதான மாய பிம்பத்தை தக்க வைக்க தி.மு.க., நினைத்தால், அந்த எண்ணம் கானல் நீராய்ப் போவதை, 2026 தேர்தல் காட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.