புதிய வகை கொரோனா தமிழகத்தில் குறைவு
புதிய வகை கொரோனா தமிழகத்தில் குறைவு
புதிய வகை கொரோனா தமிழகத்தில் குறைவு
ADDED : ஜன 08, 2024 06:08 AM
புதிய வகை கொரோனா பரவல், உலகம் முழுதும் உள்ளது. நம் நாட்டிலும் கேரளா போன்ற மாநிலங்களில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், 20க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பாதிப்பின் தீவிரம், மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டும் இருக்கும். மக்கள், மருத்துவமனைக்கு செல்லாமலேயே, வீட்டில் இருந்தே குணப்படுத்தி கொள்கின்றனர். ஆனால், கர்ப்பிணியர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முகக்கவசம் அணிந்து இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
- மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்
துறை அமைச்சர்.