முதுநிலை மருத்துவ படிப்பு ஆகஸ்ட் 3ல் 'நீட்' தேர்வு
முதுநிலை மருத்துவ படிப்பு ஆகஸ்ட் 3ல் 'நீட்' தேர்வு
முதுநிலை மருத்துவ படிப்பு ஆகஸ்ட் 3ல் 'நீட்' தேர்வு
ADDED : ஜூன் 07, 2025 11:12 PM
சென்னை:'அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலை, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள, எம்.டி., - எம்.எஸ்., ஆகிய மருத்துவ பட்டப்படிப்பு, முதுநிலை டிப்ளாமோ பட்டய படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
இதற்கான தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. அதன்படி, 2025 - 26ம் கல்வியாண்டுக்கு, ஜூன் 15ம் தேதி இரண்டு 'ஷிப்ட'களாக தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், ஒரே ஷிப்டில் நீட் தேர்வு நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், 15ம் தேதி நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு ஒரே ஷிப்டில் கூடுதல் நகரங்களில், வரும் ஆக., 3ம் தேதி காலை 9:00 முதல் பகல் 12:30 மணி வரை நடக்கும். விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் நகரத்தை, https://www.natboard.edu.in என்ற இணையதளத்தில் வரும், 13ம் தேதி பிற்பகல் 3:00 மணி முதல், 17ம் தேதி நள்ளிரவு 11:55 மணிக்குள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்.
முதலில் தேர்வு நகரத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு நகரங்கள் ஒதுக்கீடு பற்றி, ஜூலை 21ம் தேதி தெரிவிக்கப்படும். செப்., 3ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.