Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் நவாஸ்கனி போட்டி தி.மு.க.,வினர் ஏமாற்றம்

ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் நவாஸ்கனி போட்டி தி.மு.க.,வினர் ஏமாற்றம்

ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் நவாஸ்கனி போட்டி தி.மு.க.,வினர் ஏமாற்றம்

ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் நவாஸ்கனி போட்டி தி.மு.க.,வினர் ஏமாற்றம்

ADDED : பிப் 25, 2024 02:50 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்:லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்டிங் எம்.பி., நவாஸ்கனியே மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.தொகுதியை எதிர்பார்த்த தி.மு.க.,வினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் ராமநாதபுரம்மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்துார், பரமக்குடி(தனி), திருவாடானை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளும், விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி சட்டசபை தொகுதிகளும் உள்ளன.

தொகுதியில் வெற்றி விபரம்


தொகுதியில்ஆண்கள் 7 லட்சத்து 97 ஆயிரத்து 12 பேரும்,பெண்கள் 8 லட்சத்து 8955 பேரும், திருநங்கைகள் 83 பேர் என 16 லட்சத்து 6050 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் முதுகுளத்துார், ராமநாதபுரம், பரமக்குடி(தனி), திருச்சுழி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளும் தற்போது தி.மு.க., வசம் உள்ளன.

திருவாடானை, அறந்தாங்கி காங்., வசம் உள்ளன.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு 17 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் அ.தி.மு.க., 4 முறை, காங்.,4 முறை, சுயேச்சை 3 முறை, அ.இ.பா.பிளாக், த.மா.கா., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் முதுகுளத்துார் தொகுதியிலும், தங்கம் தென்னரசு திருச்சுழியிலும் வெற்றி பெற்றவர்கள்.

இதன் காரணமாக ராமநாதபுரம் லோக்சபா தொகுதியை இந்த முறை தி.மு.க., விற்கு ஒதுக்க வேண்டும். கூட்டணிக்கு தரக்கூடாது என ராஜகண்ணப்பன் கூட்டங்களில் பேசி வந்தார்.

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா, அமைச்சர் உதயநிதியுடன் நெருக்கமாக உள்ள மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பெயர்கள் வேட்பாளராக பேசப்பட்டன.

இந்நிலையில் தான் மீண்டும் தற்போதைய எம்.பி., நவாஸ்கனிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் நவாஸ்கனி (ஏணி), அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் (தாமரை) போட்டி யிட்டனர்.

நவாஸ்கனி 4,70,293 ஓட்டுகள் பெற்று நயினார்நாகேந்திரன் (3,42,984) விட 1,27,122 ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us