பண மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு ஜாமின்
பண மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு ஜாமின்
பண மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு ஜாமின்
ADDED : ஜூலை 24, 2024 02:24 PM

கரூர்: பண மோசடி வழக்கில், யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த பிரபல யூ-டியுபர் சவுக்கு சங்கர், தனது அறையில் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6வது முறையாக ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, பண மோசடி வழக்கில் இன்று(ஜூலை 24) சவுக்கு சங்கருக்கு ஜாமின் கிடைத்துள்ளது. கரூர் குற்றவியல் நீதிமன்றம் இந்த ஜாமின் உத்தரவை வழங்கி உள்ளது.