இந்தாண்டு 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: முதல்வர் ஸ்டாலின் கவலை
இந்தாண்டு 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: முதல்வர் ஸ்டாலின் கவலை
இந்தாண்டு 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: முதல்வர் ஸ்டாலின் கவலை
ADDED : ஜூலை 24, 2024 01:46 PM

சென்னை: இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை 22ம் தேதி வரை மட்டும் 250 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மீனவர்கள் கைது செய்யப்படுவதால் மீனவ மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை 22ம் தேதி வரை மட்டும் 250 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமையை தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தற்போது இலங்கையில் சிறையில் உள்ள 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.