தென் மாவட்ட கல்வி வளர்ச்சியில் தனியார் பள்ளிகள் பங்களிப்பு அதிகம் அமைச்சர் மகேஷ் பேச்சு
தென் மாவட்ட கல்வி வளர்ச்சியில் தனியார் பள்ளிகள் பங்களிப்பு அதிகம் அமைச்சர் மகேஷ் பேச்சு
தென் மாவட்ட கல்வி வளர்ச்சியில் தனியார் பள்ளிகள் பங்களிப்பு அதிகம் அமைச்சர் மகேஷ் பேச்சு
ADDED : ஜன 31, 2024 01:09 AM
மதுரை:''தென் மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியில் தனியார், சிறுபான்மையினர் பள்ளிகளின் பங்களிப்பு மிக அதிகம்'' என அமைச்சர் மகேஷ் பேசினார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி, துறை செயலர் குமரகுருபரன் தலைமையில் மதுரையில் நடந்தது.
தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் வரவேற்றார்.
இயக்குனர்கள் அறிவொளி, கண்ணப்பன், முத்து பழனிசாமி, கலெக்டர் சங்கீதா, துணை இயக்குனர்கள் ஆஞ்சலோ இருதயசாமி, சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பேசுகையில், ''கல்வித்துறையில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு மிக அதிகம். மொத்தமுள்ள 12,631 பள்ளிகளில் 56 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
''தென் தமிழக கல்வி வளர்ச்சியில் தனியார், சிறுபான்மையினர் பள்ளிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. தற்போது பொது, தனியார் பங்களிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி உட்பட மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் முன்னிலையில் உள்ளோம்.
''தனியார் பள்ளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி வருகிறது. அதற்கேற்ப கற்றல், பயிற்சி அளித்தலில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.
நியமன உத்தரவு:
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்கள் 33 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்தது.
அமைச்சர் மகேஷ் பேசுகையில், ''நல்ல சமுதாயத்தை கட்டமைக்கும் களத்தில் நேரடியாக பணியாற்றும் பொறுப்பு வட்டார கல்வி அலுவலர்களுக்கு உள்ளது. அர்ப்பணிப்புடன் பணியாற்றி அரசு திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும்,'' என்றார்.