முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
UPDATED : ஜூலை 30, 2024 07:06 PM
ADDED : ஜூலை 30, 2024 05:48 PM

சேலம்: மேட்டூர் அணை 43வது முறையாக 120 அடி என்ற முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட பிரதான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்று (ஜூலை 30) மாலை, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு 60 ஆயிரம் அடி நீர் வரத்து உள்ளது. முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்தை பொறுத்து 75 ஆயிரம் முதல் ஒரு கனஅடி நீரை வெளியேற்ற உள்ளனர். 90 ஆண்டுகால வரலாற்றில் மேட்டூர் அணை 71 முறை 100 அடியையும், 43 முறை 120 அடியையும் எட்டியுள்ளது.