என்னை அவமானப்படுத்தினார் அனுராக் தாக்கூர்: ராகுல் குற்றச்சாட்டு
என்னை அவமானப்படுத்தினார் அனுராக் தாக்கூர்: ராகுல் குற்றச்சாட்டு
என்னை அவமானப்படுத்தினார் அனுராக் தாக்கூர்: ராகுல் குற்றச்சாட்டு
UPDATED : ஜூலை 30, 2024 07:05 PM
ADDED : ஜூலை 30, 2024 05:59 PM

புதுடில்லி: ஆதிவாசிகள், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்னைகளை எழுப்பியதற்காக பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர், என்னை அவமானப்படுத்துகிறார் என காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டினார்.
பார்லிமென்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர் பேசுகையில், ''சாதி பற்றி தெரியாத ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார். யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை'' என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: ஆதிவாசிகள், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்னைகளை யார் எழுப்பினாலும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். அனுராக் தாக்கூர் என்னை துஷ்பிரயோகம் செய்து அவமானப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.