ADDED : ஜன 11, 2024 02:14 AM
* அண்ணா பல்கலை உள்ளிட்ட அனைத்து அரசு பல்கலைகளின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் உள்ளிட்ட படிப்பில் சேர, டான் செட் நுழைவு தேர்வில், மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான டான்செட் தேர்வு, மார்ச், 9ல் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, நேற்று துவங்கியது. பிப்.,7க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
* மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அடிப்படையில், 2023-24ம் ஆண்டு முதல், 2 ஆண்டு பி.எட்., படிப்புக்கு தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் வழங்கவில்லை. இதனால், இந்திய மறுவாழ்வு கழகம் நடத்தும், 2 ஆண்டு பி.எட்., சிறப்பு படிப்புக்கு, இனி அங்கீகாரம் வழங்கப்படாது. ஒருங்கிணைந்த சிறப்பு பி.எட்., படிப்பு, இனி நான்கு ஆண்டுகள் நடத்தப்படும்.
படிப்பை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள், ஆன்லைனில் பதிவு செய்யலாம் என, இந்திய மறுவாழ்வு கழக உறுப்பினர் செயலர் விகாஸ் திரிவேதி தெரிவித்துள்ளார்.